நாள்தோறும் 5,000 குழந்தைகள் பலி ; அதிர்ச்சி தகவல்
""சர்வதேச அளவில், வறுமை காரணமாக நாள்தோறும், 5,000 குழந்தைகள் பலியாகி வருகின்றனர். சத்தான உணவு, சுகாதாரமின்மையே இதற்கு முக்கிய காரணம்'' என, பிரஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா இயக்குனர் முரளி பேசினார். சேலத்தில், "யுனிசெப் மற்றும் பிரஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' சார்பில், குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்து, ஊடகங்களுடனான இரண்டு நாள் கருத்து பட்டறை நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் தலைமை வகித்தார்.
பிரஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா இயக்குனர் முரளி, முன்னிலை வகித்து பேசியதாவது: உலக அளவில், குழந்தைகளுக்கான உரிமைகள் காக்க, பல்வேறு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சர்வதேச அளவில், குழந்தைகளுக்கு சத்தான உணவு, சுகாதாரம், குடிநீர், அடிப்படை வசதிகள் கிடைக்காமல் உள்ளது. சர்வதேச அளவில், வறுமை காரணமாக நாள்தோறும், 5,000 குழந்தைகள் பலியாகி வருகின்றனர். குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை, ஊடகங்கள் மூலம் மக்களுக்கும், அரசுக்கும் எடுத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். இவ்வாறு முரளி பேசினார்.
கலெக்டர் மகரபூஷணம் பேசுகையில், "சமுதாயத்துக்கு சிறந்த வழிகாட்டியாக, பத்திரிகையாளர்கள் விளங்குகின்றனர். பெற்றோர், ஆசிரியர், சுற்றுப்புறத்தார் ஏற்படுத்தி கொடுக்கும் சூழ்நிலைகளில், குழந்தைகளின் வளர்ச்சியும், எதிர்கால நலனும் அடங்கியுள்ளது. "மாநிலம் முழுவதும், 3.6 சதவீதம் பேர், குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர். குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் பெற்றோர், தொழில் நிறுவனங்கள், உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.